சுனில் ஜயவர்தனவின் கொலையை வன்மையாக கண்டித்துள்ள போக்குவரத்து அமைச்சர்


இலங்கை சுயதொழிலாளர்கள் தேசிய ஓட்டோ சங்கத்தின் தலைவர், சுனில் ஜயவர்தன தாக்கிக் கொலை செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாக, போக்குவரத்து சேவை அமைச்சர், மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்டே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தமது சங்க உறுப்பினர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளிலிருந்து பாதுகாப்பு பெறவும் மற்றும் சுதந்திரமாக தொழிலை முன்னெடுத்துச் செல்வதற்கான பின்னணியை உருவாக்குமாறு மாத்திரமே சுனில் ஜயவர்தன கோரிக்கை விடுத்து வந்தாரென, போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குத்தகை முறையில் வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக கடன் வழங்கும் சில நிறுவனங்கள், பொறுப்பின்றி செயற்படுகின்றமை, இந்தச் சம்பவத்தின் மூலம் நன்றாக புலனாவதாகவும் இவ்வாறான சில நிறுவனங்களில் கடமையாற்றுபவர்கள் நாட்டில் பிரசித்திப் பெற்ற பாதாள குழுவைச் சேர்ந்தவர்களா என்பது தொடர்பில் ஆராயும் காலம் வந்துள்ளதென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.