இராணுவத்தினர் வவுனியாவில் விஷேட ரோந்து!

வவுனியாவில் இன்று இராணுவத்தினர் வழமைக்கு மாறாக வீதிகளில் மோட்டார் சைக்கிள் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றதை அவதானிக்க முடிந்துள்ளது .


குற்றச்செயல்கள் , சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் நகரில் அளவிற்கு அதிகமான மக்கள் நடமாட்டம் காரணமாகவும் வீதி ரோந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் . இவ்வாறு நகரின் முக்கிய பகுதிகள் , பூங்காவீதி , குருமன்காடு போன்ற உள்ளக வீதிகளிலும் மோட்டார் சைக்கிளில் வீதி ரோந்து நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் .

இன்று காலை உலங்குவானூர்த்தி வவுனியாவை வட்டமிட்டு சென்றுள்ளதுடன் புலனாய்வுத்தகவல்களின் அடிப்படையில் பாரிய குற்ற செயல்களைத் தடுப்பதற்கு விமான உலங்குவனூர்த்தி மூலமும் விஷேட நடவடிக்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.