பணத்தை திருடி பொலிசாரிடமே ஒப்படைத்த திருடன்!
திருடிய பணத்தை வைத்திருக்க பயமாக இருப்பதாக தெரிவித்து, பொலிசாரிடமே திருடன் ஒப்படைத்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்று மொனராகலையில் இடம்பெற்றுள்ளது.
சில தினங்களின் முன்னர் இளம் பெண்ணொருவரும், கணவரும் அடகு வைத்து பெறப்பட்ட ஒரு தொகைப்பணத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.
அதன்போது வழியில் உணவகம் ஒன்றின் முன்பாக முச்சக்கர வண்டியை நிறுத்திவிட்டு, மதிய உணவு கட்டிக் கொண்டு மீள முச்சக்கர வண்டியில் ஏறிய போது, முச்சக்கர வண்டியில் வைக்கப்பட்ட பணம் அடங்கிய கைப்பை திருடப்பட்டிருந்தது.
இதனையடுத்து அவர்கள் மொனராகலை பொலிசாரிடம் முறையிட்டிருந்தார்.
உணவகத்தில் விசாரணை நடத்தி துப்ப தலங்காத நிலையில், அங்கிருந்த சிசிரிவி கமராவை பொலிசார் ஆய்வு செய்தபோது அதில் பணத்தை திருடியவர் குறித்த தகவல்கள் கிடைத்தன.
இந்த நிலையில், பணத்தை திருடியவர் மொனராகலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்து, திருடிய பணத்தை மீள ஒப்படைத்தார்.
தனக்கு தனிப்பட்ட பணத்தேவை இருந்த நிலையில், முச்சக்கர வண்டிக்குள் பணத்தை அவதானித்து அதை எடுத்ததாகவும், எனினும் பணத்தை வைத்திருக்க பயமாக இருந்ததாகவும் தெரிவித்து பணத்தை அவர் பொலிஸ்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo