42,000 பொதிகளில் விலாசம் மாயம்!

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பெருமளவு பொதிகளுக்கு விலாசங்கள் அழிந்து போயுள்ளமையினால் அவற்றை உரியவர்களிடம் ஒப்படைப்பதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விமானம் ஊடாக இலங்கைக்கு அனுப்பவிருந்த பாரிய பொதிகள் கொள்கலனில் அடைக்கப்பட்ட கடல் வழியாக அனுப்பப்பட்டுள்ளன.
இதன் காரணமாக பார்சல்களில் நீர் பட்டு விலாசங்கள் மறைந்து போயுள்ளமையினால் உரிமையாளர்களை கண்டுபிடிக்க முடியாத நிலைமை ஏற்படடுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
விமானங்களில் வர வேண்டிய பொதிகள் கடல் வழியாக அனுப்பப்பட்டதன் பின்னர் முழுமையாக விலாசங்கள் மறைந்துள்ளதனால் விலாசங்கள் மறைந்துள்ளதனால் அதனை உரியவர்களுக்கு அனுப்பி வைப்பதில் குழப்பம் நிலவுகின்றது.
இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. அவை திருடப்பட்டுள்ளதாகவும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்படுகின்றன. அவை நியாயமற்ற குற்றச்சாட்டுகள் எனவும் அமைச்சர் கூறினார்.
கொரொன்னா ஏற்பட்டதை அடுத்து கடந்த காலங்களில் உலகம் முழுவதும் பணிகள் நிறுத்தப்பட்டு விமான நிலையங்கள் மூடப்பட்டன. அந்த பார்சல்கள் அனைத்தும் விமானங்களில் வர வேண்டிய பொருட்கள். கடலில் வந்த பின்னர் அவற்றில் நீர் பட்டு விலாசங்கள் மறைந்துள்ள நிலையில் அந்த பாரசல்களை எப்படி பகிர்வது என தெரியவில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.