கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு


நாட்டில் புதிதாக 23 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1947 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியதாக அடையாளம் காணப்பட்டவர்களில் 18 பேர் டுபாய் நாட்டில் இருந்து வருகை தந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை 1421 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 515 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.
Powered by Blogger.