வற்றாப்பளை உற்சவத்தில் இராணுவ தளபதி சவேந்திர சில்வா!!
வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தில் இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கலந்து கொண்டுள்ளார்.
வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் நேற்று அதிகாலை சிறப்புற ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆலய உற்சவத்தில் கலந்து கொள்வதற்கு மட்டுப்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் ஆலய வழிபாடுகளில் கலந்து கொள்ள முடியாது என குறிப்பிடப்பட்டிருந்த போதும், அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன் ஆலயத்தை சூழ இராணுவத்த்தினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கான பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இராணுவ தளபதி சவேந்திர சில்வா நேற்று மாலை 5 மணியளவில் ஆலயத்தில் வழிபாடுகளில் கலந்துகொண்டுள்ளார்.
அதோடு ஆலய வளாகத்தில் மரக்கன்று ஒன்றினையும் அவர் நாட்டி வைத்து வறிய குடும்பங்கள் சிலவற்றுக்கு ஆலய முன்றலில் வைத்து உலருணவு பொதிகளை இராணுவத்தளபதி வழங்கி வைத்தார்.
இதேவேளை வருகைதந்து ஆலய வளாகத்தில் நின்றபோது விமானப்படையினர் ஆலயத்துக்கு உலங்குவானூர்தி மூலம் மலர் தூவினார்கள்.
இதேவேளை இந்த மலர் தூவும் செயற்பாடும் சில ஆண்டுகளின் பின்னர் மீண்டும் இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




