எஸ்எஸ் ராஜமவுலியின் அடுத்த படத்தில் நடிகை ஸ்ரேயா!!
பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி தற்போது ’ஆர்.ஆர்.ஆர். என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும், தமிழ், தெலுங்கு உள்பட ஐந்து மொழிகளில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே.
மேலும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் சமீபத்தில் இணைந்தார் என்பது உறுதிசெய்யப்பட்டது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ’சிவாஜி’ தனுஷ் நடித்த ’திருவிளையாடல் ஆரம்பம்’ உள்பட பல படத்தில் நடித்த நடிகை ஸ்ரேயா இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர் அஜய்தேவ்கானுக்கு மனைவியாக நடித்துள்ளதாகவும் அவருடைய காட்சி பிளாஷ்பேக்கில் வரும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே அஜய்தேவ்கான் மனைவியாக ‘த்ரிஷ்யம்’ இந்தி படத்தில் ஸ்ரேயா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஸ்பெயின் நாட்டில் கணவருடன் இருக்கும் நடிகை ஸ்ரேயா சரண், லாக்டவுன் முடிந்து விமானங்கள் இயங்க தொடங்கியதும் இந்தியா திரும்ப உள்ளதாகவும் அதன் பிறகு அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு படமாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவலை படக்குழுவினர் உறுதி செய்யவில்லை என்றாலும் தெலுங்கு திரையுலகில் இந்த செய்தி பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)