பள்ளிவாசல்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்!!

முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இன்று பள்ளிவாசல்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தெளிவுபடுத்தியுள்ளது.

இதன்படி, அனைத்துப் பள்ளிவாசல்களின் பொறுப்பாளர்களும் தமது பிரதேச பொதுச் சுகாதாரப் பிரிவு அதிகாரியினது அறிவுறுத்தல்களுடன் கூடிய தொற்று நீக்கல் செயற்பாடுகளை பள்ளிவாசல்களில் மேற்கொள்ள வேண்டும்.
பள்ளிவாசல்களின் உள்நுழைவிற்காக ஒரு நுழைவாயிலை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், குறித்த நுழைவாயில்களில் கைகளைச் சுத்தப்படுத்தும் ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தொழுகையை மேற்கொள்பவர்களுக்கிடையில் ஒரு மீற்றர் இடைவெளி பேணப்படுவதுடன், ஒவ்வொரு தொழுகைக்காகவும் 15 நிமிடத்திற்கு முன்னதாகவே பள்ளிவாசல்கள் திறக்கப்படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், 45 நிமிடங்களே தொழுகைக்காக ஒதுக்கப்படவேண்டுமெனவும், விசேட தொழுகைகள் மற்றும் கூட்டுத் தொழுகைகள் முன்னெடுக்கப்பட அனுமத்திக்கப்படமாட்டாது எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 30 பேர்வரையிலேயே தொழுகைக்காக அனுமதிக்கப்பட வேண்டுமெனவும், அனைவருமே முகக் கவசங்களை அணிந்திருப்பதுடன், சமூக இடைவெளியினை அனைவரும் கடைப்பிடிப்பது அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து தொழுகையாளர்களும் தொழுகைக்காகப் பயன்படுத்தப்படும் தரைவிரிப்புக்களை தம்முடன் எடுத்துவருவதுடன், தொழுகை முடிந்ததும் அவற்றைத் தம்முடன் எடுத்துச் செல்ல வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிவாசல்களைப் பயன்படுத்தும் அனைவரும் சுகாதார அமைச்சினது நடைமுறைகளைப் பின்பற்றவேண்டுமெனவும், பாதுகாப்புத் துறையினர் மற்றும் பொதுச் சுகாதாரப்பிரிவினரிற்கு இவ்விடயம் தொடர்பாக ஒத்துழைப்புக்களையும் வழங்கவேண்டுமென முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ள குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.