நெற்கதிர்களை துவம்சம் செய்யும் குருவிக்கூட்டங்கள்!
திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளிலும் உள்ள விவசாய நிலங்களில் காணப்படும் நெற் கதிர் விளைச்சல்களை ஒரு வகை புது குருவி இனங்கள் கூட்டம் கூட்டமாக வயல் துவம்சம் செய்து விட்டு செல்வதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
கிண்ணியா பகுதியில் உள்ள பனிச்சங் குளம், மனியரசன் குளம், வெள்ளங் குளம், நடுஊற்று குளம், குரங்கு பாஞ்சான் குளம், துவரங்குளம் உள்ளிட்ட இன்னும் பல இடங்களில் செய்கை பண்ணப்படும் விவசாய நிலங்களை அழித்து வருவதாகவும், கூட்டம் கூட்டமாக சுமார் 5000 க்கும் மேற்பட்ட குருவிகள் ஒரே தடவையில் பறந்து வந்திறங்கி பரவலாக வயல் நெல் கதிர்களை நாசமாக்கி விட்டு செல்வதாக தெரிவிக்கின்றனர்.
சிறுபோக செய்கையை நம்பியும் மழை காலநீரினை நம்பியூம் செய்யப்படும் விவசாயம் இந்த குருவிகளால் முழுமையாக அழிவடைந்து வருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அந்தவகையில் பனிச்சங்குள பகுதியில் மாத்திரம் அண்ணளவாக செய்கை பண்ணப்பட்ட சுமார் 110 ஏக்கரில் சுமாராக 25 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
காலை 5.30 மணி தொடக்கம் 10.00 மணி வரையிலான நேரங்களிலும், மாலை 3.30 மணி தொடக்கம் 06.00 மணி வரையிலான நேரங்களிலும் பல ஆயிரக்கணக்கான குருவிகள் வயல்களை அழிக்கின்றன.
உயரிய சத்தம் கூச்சலிடுவதனால் குருவிக் கூட்டம் பறந்து சென்றாலும் மீண்டும் வயல் நிலங்களை நோக்கி மறு திசைக்கு சென்று இறங்குகின்றதாக தெரிவித்த விவசாயிகள், ஊது குழல் சத்தம் மூலமாக காவல் காக்க வேண்டிய நிலை பகல் நேரங்களிலும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அதே வேளை சுமார் ஒரு மாத காலத்துக்கும் மேலாக குருவிகளின் தொல்லை இருப்பதாகவும் தெரிவிக்கும் இது தொடர்பில் அரச திணைக்களங்கள் தெரிவித்தும், அவர்கள் இதனை கட்டுப்படுத்தவோ இது தொடர்பில் ஆராய்வில் ஈடுபடவோ முன்வரவில்லை எனவும் விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
இதேவேளை நாட்டின் ஏனைய சில மாவட்டங்களில் புதிய வகை வெட்டுக் கிளி வகை காணப்படுவதனால், இவ்வாறான குருவி இனங்களும் வருகை தருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே அழிவடைந்த விவசாய நிலங்களுக்கு நஷ்ட ஈடுகளையும் வழங்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




