பல்கலைக்கழக நடவடிக்கைகள் குறித்து விசேட அறிவிப்பு


அனைத்து பல்கலைக்கழகங்களினதும் 4 ஆம் வருட மாணவர்களின் பரீட்சைகள் ஜூன் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், இவ்வாறு ஆரம்பிக்கப்படும் பரீட்சை நடவடிக்கைகள் ஆகஸ்ட் 15 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யுமாறும் பல்கலைகழக உபவேந்தர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், பரீட்சை நடவடிக்கைகளின் போது கொரோனா தடுப்புக்கான அனைத்து சுகாதார நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவேண்டுமெனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மறு அறிவித்தல் வரை பல்கலைகழக வளாகத்திற்குள் ஒன்று கூடுதல், எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் மற்றும் விளையாட்டு பயிற்சிகளை முன்னெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.