வவுனியாவில் வெடிகொளுத்தி கொண்டாட்டம்!!

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை மற்றும் தேர்தல் திகதியிட்ட வர்த்தமானி என்பவற்றை தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் இன்று மாலை நிராகரித்தைத் தொடர்ந்து வவுனியா நகரில் பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்ந்தார்கள்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை மற்றும் தேர்தல் திகதியிட்டமை தொடர்டபாக வெளியான வர்த்தமானிக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யபட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் 05 நீதியரசர்கள் முன்னிலையில் கடந்த 10 நாட்களாக இடம்பெற்று வந்த நிலையில் தீர்ப்பு வெளியாகியது.
இதனையடுத்து, பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் வேட்பாளர் ஜானக நந்தகுமார ஆகியோர் வவுனியா பழைய பேரூந்து நிலையம், நகரப்பகுதி என்பவற்றில் தனது ஆதரவாளர்களுடன் வந்து வெடி கொளுத்தி தீர்ப்பு குறித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.