புத்தளத்தில் வாகன விபத்து- பொலிஸ் உத்தியோகத்தர் பலி!!

புத்தளம் - அநுராதபுரம் வீதியில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அம்பன்பொல, அம்பகொலவெவ பகுதியைச் சேர்ந்த டி.எம். பியந்த ( வயது 30) எனும் பொலிஸ் கான்ஸ்டபிள் (PC 83094) இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து சம்பவம் இடம்பெற்ற இன்றைய தினம் அதிகாலை குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தனது வீட்டில் இருந்து புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு கடமைக்காக சென்றுள்ளார்.
இதன்போது அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் தப்போவ பகுதியில் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த பாதுகாப்பு கொங்ரீட் கல்லில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
விபத்தில் படுகாயமடைந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துச் சம்பவம் தொடர்பில் கருவலகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.