பனுவல்கூடம் பற்றி எரிந்ததோ......!!
"எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ அங்கு விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள்" இது புரட்சியாளன் சேகுவேராவின் வரிகள்.
புத்தகங்கள் என்பது ஒரு இனத்தின் அடையாளத்தை, தனித்துவத்தை வரலாற்றை உலகிற்கு சொல்கின்ற ஒன்று. புத்தகங்கள் புரட்சிக்கும் வெற்றிக்கும் காரணமாக இருந்த வரலாறுகளும் உண்டு. மக்களின் வாழ்வியல் சிந்தனைகளை வரையறுத்த சம்பவங்களும் உண்டு.
ஒரு இனத்திற்கு அவர்களின் பாரம்பரியம், தொன்மை, வரலாறு இவற்றை சொல்லும் ஒரு இலக்கியம் மிக முக்கியம்.
இந்த இடத்தில்தான் நாம் பின்லாந்து தேசத்தைப் பற்றி அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். அண்டை நாடுகளால் அடிக்கடி நெருக்கடிகளை அனுபவித்த அந்த தேசத்திற்கென்று ஒரு இலக்கியம் எழுத்து வடிவில் இருக்கவில்லை. தமக்கென்று ஒரு தேசம், தமக்கென்று ஒரு பாரம்பரியம் உள்ளதென்பதை வாய்மொழி வடிவமாகவே அவர்கள் அறிந்துவந்தனர். ஆனால் ஒரு மக்கள் புரட்சிக்கு அந்த வாய்மொழி மூலமான கதை மட்டும் போதாது என்பதை உணர்ந்துகொண்டதால், வெறும் வாய்மொழி மூலம் இருந்த கலேவலா என்ற காப்பியத்தை இலியாஸ் லோன்ராட் (Elias Lonnrot) என்ற மொழியியல் அறிஞர் மெதுமெதுவாக சேகரித்து எழுத்து வடிவமாக்கினார். ஆயிரம் வருசங்களாக வெறும் வாய்மொழி வடிவில் இருந்ததை 1849ல் புத்தகவடிவில் கொண்டுவந்தார்.
கலேவலா புத்தக வடிவில் வந்ததும் பின்லாந்து மக்கள் எழுச்சி அடைந்தார்கள். தமக்கான தொன்மையின், அதன் அழத்தின் வரலாற்றை அறிந்து அதன்மூலம் ஒன்றாகினர்.பெரும் தேசிய எழுச்சி ஏற்பட்டது.
ஒரு இலக்கியம், ஒரு படைப்பு எந்த அளவுக்கு மக்களை விடுதலை உணர்வு கொண்டவர்களாக ஆக்கும் என்பதற்கு கலேவலா காப்பியமும் பின்லாந்தும் உதாரணமாகும்.
சுதந்திரத்துக்கு பின்பு பின்லாந்து தேசத்தின் எல்லைகள்கூட கலேவலா நூல்தான் முடிவு செய்தது. பின்லாந்தின் ஆழமான விழுமியங்கள். வாழ்வுமுறை அவர்களின் அறஉணர்வு எல்லாவற்றையும் கலேவலா புத்தகம்தான் சொல்கிறது..
முப்பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. அவ்வேளை, கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாக யாழ்நூலகம் திகழ்ந்தது.
தமிழினத்தின் விடுதலை நோக்கிய பாதையில் யாழ்நூலக எரிப்பு முக்கியம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகின்றது. தமிழினத்திற்கான விடுதலையின் அவசியத்திற்கும், அந்த எண்ணம் முனைப்பு பெறுவதற்கும் இந்தச் சம்பவமும் துணையாகியது.
தமிழர்களின் அறிவுக் களஞ்சியத்தைக் கொளுத்திவிட்டதனால் இனஉணர்வும், தேசப்பற்றும் கூட அடங்கிப்போய்விடும் என்ற பேரினவாதத்தின் கனவில் மண்விழுந்ததற்கான சான்றாகவே புத்துயிர்பெற்று மிண்டெழுந்து நிற்கிறது இன்றைய யாழ் நூலகம்...
கோபிகை
தமிழருள் இணையத்தளம்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)