தேர்தல் ஆட்சேபிப்பு மனுக்கள் மீதான விசாரணைகள் ஆரம்பம்!!

பொதுத் தேர்தலை ஜுன் 20ஆம் திகதி நடத்துவதை ஆட்சேபித்து உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகள் 10 வது நாளாகவும் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளன.
குறித்த மனுக்கள் மீதான விசாரணைகள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான உயர் நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய விசாரணையின்போது ஜனாதிபதி சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாலிய பீரிஷ் ஆகியோர் சிறப்பு சமர்ப்பனங்களை முன்வைக்கவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த மனுக்கள் கடந்த வெள்ளிக்கிழமை 9ஆவது நாளாகவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போது இடையீட்டு மனுதாரர்கள் சட்டத்தரணிகள் ஊடாக தமது சமர்ப்பணங்களை நீதிமன்றில் முன்வைத்திருந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் மனுக்கள் மீதான விசாரணைகள் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.