நாவற்குழியில் உறவினர்களுக்கிடையிலான சண்டையில் சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்!!

யாழ்ப்பாணம் நாவற்குழி 300 வீட்டுத்திட்டம் பகுதியில் உறவினர்களுக்கடையில் ஏற்பட்ட தகராறு கத்தி குத்தில் முடிந்ததில் சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 12 வயதான துவாராகா என்ற சிறுமி கழுத்தில் காயமடைந்துள்ளார்.
உறவினர்களுக்கிடையிலான ஏற்பட்ட வாய்த்த தகராறின்போது குறுக்கே சென்ற சிறுமி மீதே கத்திக்குத்து இடம்பெற்றிருக்கின்றது.
மேலும் காயமடைந்த சிறுமி சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Blogger இயக்குவது.