ஓடிடியில் ரிலீஸ் ஆகும் அடுத்த தமிழ் திரைப்படம்!
கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தமிழகத்தில் திரையரங்குகள் திறக்காமல் உள்ளன. மேலும் திரையரங்குகளை திறக்க திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தாலும் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த தகவல் தமிழக அரசிடமிருந்து இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திரைக்கு வெளியிட தயாராக இருக்கும் ஏராளமான திரைப்படங்கள் தற்போது ஓடிடியை நோக்கி தங்கள் பார்வையைத் திருப்பியுள்ளது. ஏற்கனவே ஜோதிகாவின் ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து கீர்த்தி சுரேஷின் ’பெங்குயின்’, அட்லியின் ’அந்தகாரம்’ ஆகிய திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அந்த வகையில் தற்போது மேலும் ஒரு திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கலையரசன் நடிப்பில் இயக்குனர் ஜானகிராமன் இயக்கிய ’டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்’ என்ற திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் இது குறித்து தயாரிப்பாளர் சிவி குமார் ஓடிடி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் செய்வது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
கலையரசன் ஜோடியாக ஆனந்தி நடித்துள்ள இந்த படத்தில் ஆஷ்னா ஜாவேரி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட் மதுமிதா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடலை பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)