தமிழ் திரைப்பட கொமெடி நடிகருக்குத் திருமணம்!!

தமிழ் திரைப்பட காமெடி நடிகர் ஒருவர் அமெரிக்காவில் படித்த பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது


பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம்பிரபு, லட்சுமி மேனன் நடித்த கும்கி என்ற திரைப்படத்தில் காமெடி நடிகராக நடித்தவர் அஸ்வின். இவர் மேலும் ’வந்தான் வென்றான்’ ’தில்லு முல்லு’ ’நையாண்டி’ ’நெடுஞ்சாலை’ ’கணிதன்’ ’அச்சமின்றி’’பாஸ் என்ற பாஸ்கரன்’ உள்பட பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார். மேலும் இவர் தயாரிப்பாளர் சாமிநாதன் என்பவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கும்கி திரைப்படத்தில் அவருடைய கேரக்டர் புகழ்பெற்றதால் அவருடைய பெயர் கும்கி அஸ்வின் என்று கோலிவுட்டில் அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் கும்கி அஸ்வின் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த வித்யாஸ்ரீ என்ற பெண்ணை திருமணம் செய்யவிருக்கிறார். வித்யாஸ்ரீ அமெரிக்காவில் படித்தவர் என்பது குறிப்பிட தக்கது

இந்த காதலுக்கு இருவரது பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து சமீபத்தில் எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. கும்கி அஸ்வின்-வித்யாஸ்ரீ திருமணம் வரும் 24ஆம் தேதி அஸ்வின் வீட்டில் எளிமையான முறையில் நடைபெற இருப்பதாகவும் இந்த திருமணத்தில் இரு வீட்டார்கள்களுக்கு நெருக்கமானவர்கள் மட்டும் கலந்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.