உணவுத் தவிர்ப்பால் சிறையில் முருகன் கடும் பாதிப்பு!


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, தமிழகத்தின் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் கடந்த இரு வாரங்களாக உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “வேலூர் கிளைச் சிறையில் உள்ள அவரது மனைவி நளினியுடன் காணொலி மூலம் பேச அனுமதி மறுக்கப்படுகிறது எனவும், கடந்த மாதம் இலங்கையில் உயிரிழந்த தனது தந்தையை காணொலி மூலம் கூட பார்க்க அனுமதி வழங்கவில்லை போன்ற காரணங்களால் முருகன் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்” என அவரின் சட்டத்தரணி புகழேந்தி குறிப்பிட்டுள்ளார். தற்போது முருகனின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதோடு, குளுக்கோஸ் ஏற்றி சிறை மருத்துவக் குழுவினர் கண்கானித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.