அமெரிக்காவையே எச்சரித்த நாடு எது தெரியுமா!

இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை அமைதியாக நடத்த வேண்டுமென்றால் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும் என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் எச்சரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. எதற்கு திடீரென இத்தனை காட்டம் வடகொரியாவிற்கு? என்ற கேள்வி எழலாம். இதற்கு தென் கொரியாவுடன் அமெரிக்கா காட்டிவரும் நட்புணர்வுதான் காரணமாகச் சொல்லப்படுகிறது.


கடந்த சில தினங்களுக்கு முன்பு தென் கொரியாவின் தலைநகர் சியோலுடன் இருக்கும் அனைத்துத் தகவல் தொடர்புகளையும் துண்டித்துக் கொள்வதாக வடகொரியா அறிவிப்பு வெளியிட்டது. இந்த காட்டத்துக்குப் பின்னால் ஒரு முக்கியக் காரணமும் இருப்பதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. தென் கொரியாவின் சில சமூக ஆர்வலர்கள் வட கொரியாவின் எல்லையில் அத்துமீறி அதிபர் கிம் ஜாம் உன் ஒரு சர்வாதிகாரி என்று அச்சிட்ட துண்டு பிரசுரங்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இப்படியான தரம் கெட்ட செயலை அனுமதிக்க முடியாது என அதிபரின் தங்கை கிம்யோ ஜாங் கடுமையான எச்சரித்து இருந்தார். 2018 இல் தென் கொரிய அதிபர் ஜே-இன், வட கொரியாவுடன் எல்லைத் தொடர்பான உடன்படிக்கையில் கையெழுத்திட்டு இருக்கிறார். இப்படி இருக்கும்போது தேவையில்லாமல் எல்லைப் பகுதியில் தென் கொரியா சமூக ஆர்வலர்களுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது.

அத்துமீறி சில சமூக ஆர்வலர்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளால் வட கொரியாவின் மதிப்பு கெடுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளை தென் கொரியா தொடர்ந்து அனுமதித்து வருகிறது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடருமானால் இருநாட்டு எல்லையிலும் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என எச்சரித்து இருந்தார். இத்தகைய காட்டத்துக்குப் பின்னர் வட கொரியா, தென் கொரியாவுடன் இருந்து வந்த அனைத்துத் தகவல் தொடர்புகளையும் துண்டித்துக் கொள்வதாகவும் அறிவிப்பு வெளியிட்டது.

இந்த அறிவிப்பு வெளிவந்தவுடன் உடனே தென்கொரியாவின் நட்பு நாடான அமெரிக்கா இதில் மூக்கை நுழைத்து கருத்துச் சொல்ல வரும் என அனுமானித்த வடகொரியா தற்போது, அமெரிக்காவை வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருக்குமாறு எச்சரிக்கை செய்திருக்கிறது. “நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தலை நடத்த அமெரிக்கா விரும்பினால், வட கொரியாவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையே நடந்து வரும் மோதலில் இருந்து விலகி, அது தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க வேண்டும்” என அதிபர் கிம் ஜாங் உன் எச்சரித்ததாக அமெரிக்காவின் விவகாரத் துறை இயக்குநர் ஜெனரல் குறிப்பிட்டார் என்றே வடகொரியாவின் KCNA நாளேடு செய்தி வெளியிட்டு இருக்கிறது.

வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனை போன்ற விவகாரங்களில் பல ஆண்டுகளாக கருத்து மோதல் இருந்து வருகிறது. இதுகுறித்து சிங்கப்பூரில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர். ஆனால் அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து இருநாட்டு அதிபர்களும் அவ்வபோது, முரண்பாடு கொண்ட கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது தென் கொரியா விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று வடகொரிய அதிபர் தானாக முன்வந்து கருத்துத் தெரிவித்து இருப்பதாக ஊடகங்கள் செய்கிதளை வெளியிட்டு வருகின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.