வடக்கு மக்களிற்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

இந்தியாவிலிருந்து வடக்கு மாகாணத்திற்குள் சட்டவிரோதமாக யாராவது நுழைந்தால் உடனடியாக சுகாதார துறையினருக்கு அல்லது பாதுகாப்பு துறையினருக்கு தங்கள் பகுதி கிராமசேவகர், சுகாதார பரிசோதகர் ஊடாக வழங்குமாறு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் .


இலங்கையில் கொரோனா தொற்றின் பரம்பல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் மத்தியிலேயே புதிய நோயாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.

அத்துடன் இந்தியாவில் தற்பொழுது கொரோனா நோயின் பரம்பல் மிகத் தீவிரமாக அதிகரித்துள்ள இந்தியாவிலிருந்து இரகசியமாக மீன்பிடிப்படகுகள் மூலம் தமிழ்நாட்டிலிருந்து சிலர் இங்கு வருகை தரலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் அவர்களால் இலங்கையில் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவ்வாறு எமது நாட்டிற்குள் வருகை தருபவர்களை சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்துவதன் மூலம் எமது நாட்டில் இந்நோய் பரவுவதை தடுக்கக் கூடியதாக இருக்குமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, இவ்வாறு யாராவது இரகசியமான முறையில் இந்தியாவிலிருந்து உங்கள் பிரதேசத்திற்கு புதிதாக வருகை தந்திருந்தால் அவர்கள் பற்றிய தகவல்களை உடனடியாக உங்கள் பிரதேசத்திற்குரிய கிராம சேவையாளர், சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர் ஆகியோருக்கு அறியத்தருமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் 24 மணிநேர அவசர அழைப்பெண் 021 222 6666 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொண்டு அவர்களைப்பற்றிய தகவல்களை வழங்குமாறும் கூறப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.