கீர்த்தி சுரேஷூக்காக இணையும்பிரபல நடிகைகள்!!
நடிகையர் திலகம்’ என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் அதன் பின்னர் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் அதிகம் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் அவர் தற்போது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் ’பெங்குயின்’ இந்த திரைப்படம் வரும் 19ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது என்பதும் இந்த திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் நடித்த ’பெங்குயின்’ படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய நான்கு மொழி டீசர்களை நான்கு முன்னணி நடிகைகள் வெளியிட உள்ளனர். தமிழில் நடிகை த்ரிஷாவும் மலையாளத்தில் நடிகை மஞ்சுவாரியரும், தெலுங்கு நடிகை சமந்தாவும், ஹிந்தியில் நடிகை டாப்ஸியும் நாளை மதியம் சரியாக 12 மணிக்கு இந்த டீசரை வெளியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கீர்த்தி சுரேஷின் படத்திற்காக நான்கு முன்னணி நடிகைகள் இணைந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஈஸ்வர் கார்த்திக் என்பவர் இயக்கியுள்ளார் மேலும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் என்பதும், கார்த்திக் பழனி ஒளிப்பதிவில் அனில் கிரிஷ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)