விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தில் அஞ்சலி!!
நானும் ரெளடிதான்’ ‘தானா சேர்ந்த கூட்டம்’ ஆகிய திரைப்படங்களை அடுத்து கடந்த இரண்டு வருடங்களாக வேறு எந்த திரைப்படத்தையும் இயக்காமல் இருந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்பட பலர் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் நடிகை அஞ்சலி தனது சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கல்கி கோச்லின் நடித்த ஒரு காட்சிக்கு அஞ்சலி டப்பிங் பேசியுள்ளார். வீடியோ கால் மூலமே டப்பிங் பேசிய அஞ்சலிக்கு, விக்னேஷ் சிவன் நன்றி கூறியது போல் இந்த வீடியோ முடிவடைகிறது
இது குறித்து குறிப்பிட்ட அஞ்சலி ’இந்த ஊரடங்கு நேரத்தில் வீடியோகால் மூலம் டப்பிங் செய்வது மகிழ்ச்சியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அஞ்சலி டப்பிங் செய்துள்ள இந்த படம் விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படமா? வெப்சீரிஸ்ஸா? அல்லது குறும்படமா? என்று தெரியவில்லை என்றாலும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் அனுஷ்கா உடன் அஞ்சலி நடித்த ’சைலன்ஸ்’ திரைப்படத்தின் ரிலீஸை அஞ்சலி எதிர்பார்த்து காத்திருக்கிறார். ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் படம் தனக்கு நிச்சயம் தென்னிந்திய திரையுலகில் ஒரு திருப்பத்தை கொடுக்கும் என்று அவர் எதிர்பார்க்கிறார். அதேபோல் ’நேர் கொண்ட பார்வை’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் அஞ்சலி முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)