ரஜினிக்கு கொரோனா பாசிட்டிவ்- டுவீட் போட்டு பின் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்!

ரஜினிகாந்த்துக்கு கொரோனா பாசிட்டிவ் என காமெடிக்கு ஒரு டுவிட் போட்டு அதன் பின் ரஜினி ரசிகர்களால் கண்டனம் தெரிவிக்கப்பட்டதால் தனது செய்கைக்கு வருத்தம் தெரிவித்த பாலிவுட் நடிகர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


பிரபல பாலிவுட் நடிகர் ரோஹித் ராய் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் ரஜினிகாந்த் அவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது கொரோனாவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்று நகைச்சுவையாக ஒரு டுவிட்டை பதிவு செய்தார்

இந்த டுவிட் மிகப்பெரிய அளவில் வைரலான நிலையில் ரஜினி ரசிகர்கள் இந்த டுவீட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். ரோஹித் ராயை விமர்சனம் செய்து நூற்றுக்கணக்கான கமெண்ட்டுக்கள் பதிவாகின. இதனை அடுத்து இந்த டுவிட்டை தான் யாரையும் புண்படுத்துவதற்காக பதிவு செய்யவில்லை என்றும் வழக்கமாக ரஜினியை வைத்து பதிவு செய்யப்படும் ஜோக்குகள் போல் நகைச்சுவைக்காக தான் பதிவு செய்தேன் என்றும் ரோஹித் ராய் விளக்கமளித்தார். மேலும் தனது டுவிட் ரஜினி ரசிகர்களின் மனதை புண்படுத்தியிருந்தால் தான் வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும் கூறினார். இதனை அடுத்து ரஜினி ரசிகர்கள் அமைதி ஆனார்கள்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.