நா முத்துகுமார் மகனின் கவிதை!!

தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவரான நா.முத்துகுமார் கடந்த 2016ஆம் ஆண்டு உடல்நலக்கோளாறு காரணமாக மரணம் அடைந்த நிலையில் அவரது பிறந்த நாள் இன்று திரையுலகினர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்ற வகையில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் பிறந்தநாளையொட்டி அவரின் மகன் ஆதவன் தனது தந்தைக்கு எழுதிய கவிதை இதோ:


 என் தந்தை

என் தந்தை பிறந்த இடம் காஞ்சிபுரம்.

அவர் என் தந்தையாக கிடைத்தது எனது வரம்

என் தந்தையின் பாடல்கள் சொக்கதங்கம்

அவர் எங்கள் காட்டில் சிங்கம்

என் தந்தையின் வரிகள் முத்து

அவர்தான் எங்களின் சொத்து

என் தந்தை எனக்கு ரொம்ப பிடிக்கும்

அவர் இல்லை என்று நெஞ்சம் சில நேரம் வலிக்கும்

என் தந்தைக்கு என் அம்மா ஒரு அழகிய ரோஜா

எப்பொழுதும் அவர் பாடல்களில் அவர் தான் ராஜா

எனக்கும் என் தங்கைக்கும் நீங்கள் தான் அப்பா

இன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்தால் என்ன தப்பா

- மழலை கவிஞர் ஆதவன் முத்துக்குமார்

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.