15 நாட்களுக்கு பின்னர் தோண்டி எடுக்கப்பட்டது சிசுவின் சடலம்!

ஹட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட ஹட்டன் டிக்கோயா தோட்டபகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் இருந்து 15 நாட்களுக்கு பின்னர் ஆண்சிசு ஒன்றுதோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

இன்று ஹட்டன் நீதிமன்ற பதில்நீதவான் எஸ்.ராமமுர்த்தி தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குறித்த சிசு தோண்டியெடுக்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு பொதுமகன் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய ஹட்டன் பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற தோட்டபகுதிக்கு விரைந்தனர்.

சிசுவின் தாயிடம் மேற்கொண்ட விசாரனைகளை அடுத்து சிசு புதைக்கப்பட்ட பகுதியினை குறித்த

பெண் அடையாளம் காட்டியதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த பெண் ஏற்கனவே இருபிள்ளைகள் உள்ள நிலையில் கணவர் உயிர்ழந்துவிட்டமையும் பொலிஸாரின்

ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த ஏழாம் திகதி குறித்த சிசு குழிதோண்டி புதைக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்தே

விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி ஹேஷான் வரவழைக்கப்பட்டு தோண்டியெடுக்க பட்ட சிசு பிரேத பரீசோதனைக்காக டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிசுவின் தாய் இன்றைய தினம் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஹட்டன் பொலிஸார் , மேலதிக விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.