கிரிஸ்பி கார்ன் ஃப்ரை

சோளம் கி.மு 2750 காலகட்டத்திலேயே மெக்ஸிகோவில் வனப்பயிராக வளர்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. காலனி ஆதிக்க காலத்தில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து காய்கறிகள், பழங்கள் போன்றவை மற்ற பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு அங்கு அவை பூர்வீகப்
பயிர்களைக் காட்டிலும் மிகுந்த விளைச்சல் கொடுக்கக்கூடிய பயிர்களாக மாறி இருக்கின்றன. அப்படிப்பட்ட ஓர் அற்புத பயிர்தான் சோளம். நமது உடலின் தினசரி நார்ச்சத்து தேவையை முழுமையாகக் கொண்ட பயிர் தானியமாக சோளம் இருக்கிறது. சோளத்தைப் பிரதானமாகக்கொண்டு இந்த கிரிஸ்பி கார்ன் ஃப்ரையைச் செய்துகொடுத்து வீட்டிலுள்ளவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

என்ன தேவை?

வேகவைத்து, உதிர்த்த சோள முத்துகள் - 2 கப்

கொத்தமல்லித்தழை விழுது - 2 டேபிள்ஸ்பூன்

புதினா தழை விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்

ஓமம் - ஒரு டீஸ்பூன்

மைதா மாவு - 4 டேபிள்ஸ்பூன்

ரவை - ஒரு டேபிள்ஸ்பூன்

சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

கிரீன் சில்லி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

ஓட்ஸ் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

மேலே தூவ: சாட் மசாலாத்தூள், நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு

எப்படிச் செய்வது?

கொடுக்கப்பட்டுள்ள பொருள்கள் அனைத்தையும் (எண்ணெய் தவிர) வாய் அகன்ற பவுலில் போட்டு சிறிதளவு நீர் தெளித்துப் பிசைந்து மூடி 10 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். மாவை சூடான எண்ணெயில் உதிர்த்துப்போட்டுப் பொரித்தெடுத்து, சாட் மசாலாத்தூள், நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
Blogger இயக்குவது.