கோட்டபாயவுக்கு கொலை மிரட்டல்!!


புஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றி அனுப்பப்பட்ட குற்றவாளிகளான கொஸ்கொட தாரக, பொடி லெசி உட்பட குழுவினர் ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் உட்பட சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் குற்ற விசாரணை திணைக்களம் விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று உதவி பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன லாமாஹேவா உட்பட குற்ற விசாரணை திணைக்கள குழுவினர் சிறைச்சாலை தலைமையகத்திற்கு வந்து உயர் அதிகாரிகளிடம் வாக்குமூலம் ஒன்று பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் ஆணையாளர்களான சந்தன ஏக்கநாயக்க, துசித உடுரவ மற்றும் சிறைச்சாலை புலனாய்வு பிரதான உதவி அத்தியட்சகர் பிரசாத பிரேமதிலக்க ஆகியவர்களிடம் சில மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொஸ்கொட தாரக, ஹிக்கடுவே பொடி லெசி, பிட்டிகல் கெவுமா உட்பட பாதாள உலக குழு தலைவர்கள் சிலர் தங்களை புஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்புவதற்கு எதிர்ப்பு வெளியிட்டு உணவு பகிர்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதனை ஆராய்வதற்காக சிறைச்சாலையின் உயர் அதிகாரிகள் கடந்த மாதம் 26ஆம் திகதி புஸ்ஸ பிரதேசத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் உட்பட அதிகாரிகள் தங்களுக்கு பெரிதில்லை எனவும் ஆயுதங்கள் மற்றும் உறுப்பினர்களுடன் தங்கள் வலயமைப்பு தொடர்ந்து இயங்குவதாக கூறி சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த தாரக, லெசி உட்பட குழுவினர் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.