அவுஸ்ரேலியா, ஹொங்கொங் மக்களுக்கு குடியுரிமை அளிப்பது குறித்து பரிசீலனை!
சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டத்தால் பாதிக்கப்படும், ஹொங்கொங் மக்களுக்கு அடைக்கலம் தந்து குடியுரிமை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக, அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ஹொங்கொங்கில், தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அமுல்படுத்தியுள்ளது.
இதனால் அதிருப்தியடைந்துள்ள அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிசன், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், முதன் முறையாக கைது செய்யப்பட்டுள்ள 10பேர் விவகாரம் குறித்தும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘ஹொங்கொங்கில் நடைபெறும் போராட்டம் கவலை அளிக்கிறது. பல வாரங்களுக்கு முன்பாகவே, ஹொங்கொங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தால் பாதிக்கப்படுவோருக்கு, அடைக்கலம் வழங்குவது குறித்து, அரசு பரிசீலிக்கத் ஆரம்பித்து விட்டது. இது குறித்து இறுதி முடிவு எடுத்த பின், முறையாக அறிவிப்பு வெளியிடப்படும்’ என கூறினார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo