பத்திரிகையாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கும் பிள்ளையான் குழு!

மட்டக்களப்பில் உள்ள தமிழ் பத்திரிகையாளர்களுக்கு பிள்ளையான் குழு தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல் விடுத்து வருகிறது.

சில பத்திரிகையாளர்களுக்கு தொலைபேசி ஊடகவும் நேரில் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக மட்டக்களப்பில் உள்ள தமிழ் பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சவப்பெட்டி ஒன்றை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்
6ஆம் திகதிக்கு பின் உங்கள் சவங்கள் ஆத்தங்கரை ஓரம் கிடக்கும்.
இது போன்ற கொலை அச்சுறுத்தல்களை பிள்ளையான் குழு தொடர்ச்சியாக செய்து வருகிறது.
அண்மையில் பிள்ளையான் குழுவை சேர்ந்த குணரத்தினம் உமா ரமணன் என்ற நபர் தமிழ் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட வேண்டும், அவர்கள் ஊடகவியலாளர்கள் அல்ல. புறோக்கர்கள் எனவே தமிழ் பத்திரிகையாளர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும் என முகநூலில் பகிரங்கமாக எழுதியிருந்தார்.
இந்த குணரத்தினம் உமா ரமணன் என்ற பிள்ளையான் குழு நபர் கொலை கொள்ளை, பாலியல் பலாத்கார குற்றங்களிலும் ஈடுபட்டவர் என்றும் மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்யதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்ட போதும் பிள்ளையான் ஆயுதக்குழுவை சேர்ந்தவர் என்ற அச்சம் காரணமாக பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை என்றும் மட்டக்களப்பு தமிழ் பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தமக்கு தொடர்ச்சியாக பிள்ளையானின் ஆயுதக்குழுவால் தமக்கு உயிர் ஆபத்து ஏற்படலாம் என தாம் அஞ்சுவதாக மட்டக்களப்பில் உள்ள தமிழ் பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.