வவுனியா மணிக்கூட்டு சந்தியடியில் விபத்து!!

வவுனியா மணிக்கூட்டு சந்தியடியில் நேற்று(17.07.2020) இரவு 9 மணியளவில் முச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கில் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

வவுனியா புகையிரத நிலைய வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் மணிக்கூட்டு சந்தியூடாக கண்டி வீதிக்கு ஏற முற்பட்ட சமயத்தில் கண்டி வீதியூடாக பயணித்த முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் இரு வாகனங்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளின் சாரதியான 28 வயது மதிக்கத்தக்க நபர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.