கனடா பிரதமரின் குடியிருப்புக்குள் நுழைந்த இராணுவ வீரருக்கு எதிராக 22 பிரிவுகளில் வழக்கு!
கனடா பிரதமர் ட்ரூடோவின் குடியிருப்புப் பகுதிக்குள் அத்துமீறி ஆயுதங்களுடன் நுழைந்த இராணுவ வீரருக்கு எதிராக 22 பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்துமீறி நுழைந்தமை, ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்தமை, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 22 பிரிவுகளில் இராணுவ வீரரான ஹூரன் என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒட்டாவாவில் ரைடோ பகுதியில் பிரதமர் ட்ரூடோ மற்றும் மாகாண ஆளுநர் ஜூலி பேயட் அகியோரின் குடியிருப்புகள் அமைந்துள்ளன.
கடந்த வியாழனன்று ஆயுதங்களுடன் காரில் சென்ற ஒருவர் குறித்த பகுதியின் நுழைவுவாயில் கதவை உடைத்துக்கொண்டு துப்பாக்கியுடன் பிரதமரின் குடியிருப்பு நோக்கிச் சென்றபோது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
இதனையடுத்து பொலிஸ் விசாரணையில் மனிரோபா (Manitoba) மாகாணத்தைச் சேர்ந்தவரும் கனேடிய இராணுவத்தில் கடமையாற்றுபவருமாக ஹூரன் (வயது-46) என்றும் தெரியவந்தது.
பிரதமரின் குடியிருப்புக்குள் ஆயுதங்களுடன் நுழைந்தமை தொடர்பாக பொலிஸாரிடம் அவர் கருத்துக்கூற மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், விரைந்து செயற்பட்டு எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுத்தமைக்கு பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ பொலிஸாருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo