வவுனியாவில் குரங்கினால் ஏற்பட்ட அவலம்!!
வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியபாரிபாலகர் ஒருவரின் பெறுமதிமிக்க தொலைபேசியை குரங்கு ஒன்று தூக்கிசென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று மாலை வவுனியா வைத்தியசாலைக்குள் நுளைந்த குரங்குகள் அங்கு வைக்கப்பட்டிருந்த தாதியபரிபாலகர் ஒருவரின் தொலைபேசியை தூக்கிச்சென்றுள்ளது.
எனினும் அதனை துரத்திசென்ற நிலையில் மதில் வழியாக பாய்ந்த குரங்கு, திருடிய தொலைபேசியுடன் ஏ9 வீதியில் உள்ள மரம் ஒன்றில் ஏறிக்கொண்டது.
பல முயற்சிகள் எடுத்த நிலையில் நீண்ட நேரமாகியும் குறித்த குரங்கு தொலைபேசியை கீழே வீசவில்லை.
இதேவேளை வவுனியா நகரப்பகுதியில் சிறியான் ரக குரங்குகளின் தொல்லைகள் அதிகரித்து வருவதுடன் வியாபார நிலையங்களிற்குள் செல்லும் அவை அங்கிருக்கும் பொருட்களையும், பணப்பைகளையும், தூக்கிச்செல்லும் சம்பவங்களும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo