தேர்தலுக்கான ஏற்பாடுகள் திருகோணமலை மாவட்டத்தில் பூர்த்தி-அரசாங்க அதிபர்!!
தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
2019ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின்படி இத்தேர்தலில் மொத்தமாக 288868 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.இதில் சேருவல தேர்தல் தொகுதியில் 80912 வாக்காளர்களும் திருகோணமலை தொகுதியில் 97065 வாக்காளர்களும் மூதூர் தொகுதியில் 110891 வாக்காளர்களும் அடங்குவர். இவற்றுள் தபால் மூல வாக்காளர்கள் 15200 பேர் குறிப்பிடத்தக்கது.நடைபெற்ற தபால்மூல வாக்குப்பதிவில் 14907 வாக்காளர்கள் தம் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.இது 98 சதவீத வாக்களிப்பை பிரதிபலிக்கின்றது.
மாவட்டத்தில் மொத்தமாக 307 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாக்கெண்ணும் பணிகள் திருகோணமலை விபுலானந்தாக்கல்லூரியில் நடைபெறும்.
நாட்டில் 44 வாக்கெண்ணும் நிலையங்களில் வாக்கொண்ணும்பணிகள் நடைபெறவுள்ளது.இவற்றுள் 09 நிலையங்கள் அஞ்சல் வாக்கெண்ணும் நிலையங்களாக செயற்படும்.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மொத்தமாக 30 வாக்கெண்ணும் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கொவிட் 19 வைரஸ் பாதுகாப்பு நடைமுறைகளை கருத்திற்கொண்டு சுகாதார நடைமுறைகளை பின்பற்றல் காரணமாக வாக்கெண்ணும் நிலையங்கள் கடந்த முறை தேர்தலைவிட இம்முறை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இற்றைவரை மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு பிரிவிற்கு 128 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.இவற்றுள் அநேகமானவை பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வாக்குப்பெட்டிகள் விநியோகம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 04 ம் திகதி விபுலானந்தாக்கல்லூரியில் காலை 7 மணி முதல் நடைபெறவுள்ளது.
சுமார் 5000க்குமேற்பட்ட அரச அதிகாரிகளும் ஒரு வாக்களிப்பு நிலையத்திற்கு இரு பொலிசார் உட்பட பல பொலிஸ் உத்தியோகத்தர்களும் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக திருகோணமலை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை