குறித்த தினத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்படும்!!

பொதுத்தேர்தலை ஜீலை 25 ஆம் திகதி நடத்தவோ, அல்லது தேர்தலை பிற்போடவோ வேண்டிய நெருக்கடியான சூழல் தற்போது தோற்றம் பெறவில்லை. வைரஸ் முழுமையாக இல்லாதொழிக்கப்பட்ட பின்னர் பொதுத்தேர்தலை நடத்த ஆணைக்குழு தீர்மானிக்கவில்லை.

சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் பலமாக வகுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய பொதுத்தேர்தல் குறித்த தினத்தில் நடத்தப்படும். அனைத்து சவால்களையும் அரசாங்கம் வெற்றிக்கொள்ளும் என வனஜீவராசிகள் பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் துறை அமைச்சர் எஸ். எம். சந்ரசேன தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொவிட்- 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து உரிய நடவடிக்கைகளை முறையாக பின்பற்றி வருகிறது. தற்போது புதிதாக வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.
இதனை கருத்திற் கொண்டு தேர்தலை பிற்போட வேண்டிய தேவை ஏதும் கிடையாது. நெருக்கடியான சூழ்நிலையில் பொதுத்தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து தேர்தல் ஆணைக்குழு முறையான திட்டங்களை வகுத்துள்ளது.
கொவிட் -19 வைரஸ் பரலலை முழுமையாக இல்லாதொழித்து விட்டு பொதுத்தேர்தலுக்கு செல்லவில்லை. வைரஸ் பரவலுக்கு மத்தியிலே தேர்தலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
ஆகவே புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவார்கள் என்பது எதிர்பார்க்கப்பட்டதே. இந்த நெருக்கடியை எம்மால் முறையாக வெற்றிக் கொள்ள முடியும்.
தற்போதைய நிலையில் பொதுத்தேர்தலை ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதியில் நடத்தாமல் பிற்போடவோ, அல்லது அதற்கு முற்பட்ட தினத்தில் அதாவது சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் குறிப்பிடுவதை போன்று இம்மாதம் 25 ஆம் திகதியில் நடத்தவோ வேண்டிய தேவை கிடையாது. ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதியே பொதுத்தேர்தல் இடம் பெறும்.
சுகாதார தரப்பினரது அறிவுறுத்தல்களை பொது மக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும். அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அனைத்து தரப்பினரும் அரசியல் பேதங்களை துறந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தற்போதைய சவாலை எம்மால் வெற்றிக் கொள்ள முடியும் என்றார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.