மின் கட்டண அறிக்கை சமர்ப்பிப்பு!!

மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின்சாரக் கட்டணங்களை செலுத்துவது தொடர்பில் விசாரிப்பதற்கும், பொது மக்களுக்குமான சலுகைகளை வழங்குவதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கு நியமிக்கப்பட்ட குழு, தனது இறுதி அறிக்கையை இன்று மின் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பிக்கவுள்ளது.

COVID-19 தொற்றுநோய் பரவுவதைத் தணிக்க, சம்பந்தப்பட்ட மாதங்களில் ஊரடங்கு உத்தரவு விதித்ததன் காரணமாக மின்சார கட்டணங்கள் உயர்ந்துவிட்டதாகக் நுகர்வோர் முறைப்பாடுகளை சமர்ப்பித்தனர்.
இந்த நிலையில் அதனை கருத்தில் கொண்டு ஜூலை 2 ஆம் திகதி மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்தா அமரவீர ஐவர் அடங்கிய குழுவை நியமித்தார்.
இதேவேளை கடந்த வாரம் அமைச்சரவை கூட்டியபோது, நுகர்வோருக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அமைச்சர் அமரவீராவுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந் நிலையில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் கூடுதல் செயலாளர் ஹேமந்த சமரகூன் தலைமையிலான குறித்த குழுவின் அறிக்கை நாளை அமைச்சர் அமரவீராவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
அதன் பின்னர் மஹிந்த அமரவீர அந்த அறிக்கையை புதன்கிழமை கூடும் அமச்சரவையில் சமர்ப்பிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.