திருவையாறு மக்கள் வீதி மறியல் போராட்டம்!!


தஞ்சாவூர்- திருவையாறு, கருப்பூரிலுள்ள மக்கள் மதுபானக்கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருக்காட்டுப்பள்ளி – கண்டியூர்  வீதியை மறித்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,  கருப்பூரில் பள்ளிகள் இருக்கும் இடத்தில்  புதிதாக  மதுக்கடையொன்றை திறக்க தீர்மானிக்கப்பட்டு, அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனால் விசனம் அடைந்த மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி மறியல் போராட்டத்தில் இன்று காலை ஈடுபட்டனர்.
இதன்போது சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு வருகைதந்த பொலிஸார், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் மதுக்கடைகள் அமைக்கப்படாது என பொலிஸார் உறுதியளித்ததை தொடர்ந்து, மக்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
Blogger இயக்குவது.