கடனிற்காக மனைவியை விற்பனை செய்த கணவன்!
யாழ்ப்பாணத்தில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல், தனது மனைவியை விற்பனை செய்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் குறித்த ஆசாமியை தேடிப்பிடித்து ஊர் இளைஞர்கள் நையப்புடைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம், தெல்லிப்பழையை சேர்ந்த குடிகார கணவனான குறித்த நபர், ஒரு தொகை பணத்தை அண்மையில் கடன் வாங்கியுள்ளார். எனினும், அந்த பணத்தை அவரால் திருப்பி செலுத்த முடியாததால் , நயவஞ்சகமாக தனது மனைவியை யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதியொன்றிற்கு வேலைக்கு என சொல்லி அழைத்து வந்து விட்டுள்ளார்.
அதன் பின்னர்,அங்கு வந்த நபரொருவர் அந்த பெண்ணுடன் அத்துமீறி நடக்க முனைந்ததுடன், தன்னிடம் வாங்கிய கடனிற்காக அவர் விற்பனை செய்யப்பட்டு விட்டார் என, அவரது கணவன் எழுதிக் கொடுத்த ஆவணத்தையும் காண்பித்துள்ளார்.
கடிதத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவி, அந்த நபரை அடித்து துவைத்ததுடன், கத்திக்கூச்சலிட்டபடி வீதிக்கு வந்ததை அடுத்து அங்கிருந்த இளைஞர்கள், அந்த நபரை நையப்புடைத்தனர்.
அதன்பின்னர், அந்த பெண்ணுடன் இணைந்து, மனைவியை விற்பனை செய்த ஆசாமியை தேடிப்பிடித்த இளைஞர்கள் அவரையும் நன்றாக கவனித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக சமூக சீர்கேடான விடயங்கள் இடம்பெறுவதாக சமூக ஆர்வலகள் விசனம் வெளியிட்டுள்ளனர்
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo