யாழில் பொருட்கள் வாங்க முண்டியடிக்கும் மக்கள்!!

நாட்டில் நேற்றையதினம் பெருமளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படடதை தொடர்ந்து, யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் மக்கள் பொருட்களை வாங்க முண்டியடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீண்டும் கொரோனா பரவினால் மீளவும் லொக்டவுன் அறிவிக்கப்படலாம் என பரவும் வதந்தியையடுத்து, வர்த்தக நிலையங்களில் மக்கள் பெருமளவில் பொருட்களை கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ளனர்.
கடந்த லொக் டவுன் நேரத்திலும் மக்கள் தேவையற்ற பரபரப்புடன் பெருமளவு பொருட்களை வாங்கிக் குவித்ததில், தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டது.
அத்துடன், பல வர்த்தகர்கள் பொருட்களின் விலையை உயர்த்தி பகல் கொள்ளை அடித்தனர்.
அந்தவகையில் யாழ்ப்பாணத்தின் முக்கிய அரிசி ஆலைகள் பல, அரிசி விலையை உயர்த்தி இருந்தன.
இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் குறிப்பிட்ட முகாமொன்றிலேயே அடையாளம் காணப்பட்டனர்,
அத்துடன் இதனால் சமூகத்தொற்றாகும் அபாயமில்லையென அரசு அறிவித்துள்ள நிலையிலும், யாழில் உள்ள மக்கள் தேவையற்ற பரபரப்பை வெளிப்படுத்தி வருகின்றதாக கூறப்படுகின்றது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.