கொரோனா நோயாளி வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓட்டம்!!

IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது, மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற நபரக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது, மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற நபர் ஒருவர் தொடர்பில் காவற்துறை பொதுமக்களின் உதவியினை கோரியுள்ளது.

சந்தேக நபரின் இடது கால் ஊனமுற்ற நிலையிலும், நடைபயிற்சி செய்யும் போது முடங்கிப்போயுள்ளதாகவும் காவற்துறை அடையாளப்படுத்தியுள்ளது. போதை பொருளுக்கு அடிமையான சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு தப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சந்தேக நபரை அடையாளம் கண்டால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு 0718591017,0718592290,0718591864 அல்லது 119 தொடர்பினை மேற்கொள்ளுமாறு காவற்துறை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.