ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டனர்!!
அதற்கமைய உலக அளவில் கொரோனாவில் இருந்து ஒரு கோடியே 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
உலகளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் பெரும் முயற்சி எடுத்து வருகின்றன.
எனினும் கொரோனாவுக்கு எதிரான சரியான மருந்து இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.
இருந்தபோதிலும் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதேசமயம், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் கனிசமாக உயர்ந்து வருகிறது.
அதற்கமைய உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் இதுவரையில், ஒரு கோடியே 64 இலட்சத்து 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒரு கோடியே 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ள நிலையில், பாதிப்புக்கு உள்ளான 57 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதுடன், அவர்களில் 66 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இதேநேரம் இந்த வைரஸ் தொற்றினால் 6 இலட்சத்து 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் கொரோனா வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முறையே அமெரிக்கா, பிரேஸில், இந்தியா, ரஸ்யா போன்ற நாடுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை