கனரக வாகனத்தில் சிக்கி மாணவன் உயிரிழப்பு!!
கல்முனை பகுதியிலுள்ள குளமொன்றினை புனரமைக்கும் பணியில் ஈடுபட்ட கனரக வாகனத்தின் சில்லுக்குள் அகப்பட்ட பாடசாலை மாணவனொருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கல்முனை துரைவந்தியமேடு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி பயின்று வந்த, மோ.ஜதுர்சன்(வயது. 10) என்ற மாணவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவனின் சடலம், பிரேத பரிசோதனைக்காக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo