விரைவில் நாட்டில் விசேட சோதனைப்பிரிவு!!
குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடபுடைய வர்த்தகர்கள் குறித்த விசாரணைகள் மேற்கொள்வதற்கு தனியான விசேட பிரிவு ஒன்றை அமைப்பது தொடர்பாக பொலிஸ்துறை அவதானம் செலுத்தியுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டுவார காலப்பகுதியில், குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பாக அதிகளவான சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர் ,இதற்கு முன்னர் கைதுசெய்யப்பட்ட எண்ணிக்கையை விடவும் இது இரண்டு மடங்கு அதிகம் எனவும் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்துடன் ஈடுபடுபவர்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தனியான விசாரணை பிரிவை நிறுவ பதில் காவல்துறைமா அதிபர் அவதானம் செலுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo