கந்தகாடு தனிமைப்படுத்தல் மையத்தில் மோதல்!!

கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

இன்று (புதன்கிழமை) அதிகாலையி​ல் குறித்த நிலையத்தில் அனுமதிக்கப்பட்டவர்களே இவ்வாறு மோதலில் ஈடுபட்டுள்ளதாக வெலிக்கந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள், கந்தகாடு, சேனபுர ஆகிய மத்திய நிலையங்களில் போதை புனர்வாழ்வு ​நிலையத்தில் கொ​ரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.

இதன்போது காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வெலிக்கந்த பொலிஸார் கூறியுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.