கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அசமந்தம்!!
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளாப்படும் உடல்களை மீளவும் உறவினர்களிடம் கையளிப்பதில் தாமதம் ஏற்படுத்தப்படுவதாக உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக கிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாகத்தின் அசண்டையான போக்குக் காரணமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் சடலங்கள் காலம் கடத்தப்பட்டே கையளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
கடந்த இரண்டு தினங்களுக்குள் இவ்வாறு சாவடைந்த நான்கு உடலங்கள் உறவினர்களிடம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதாகவும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து உறவினர்களுக்கு உதவவேண்டிய வைத்தியசாலை நிர்வாகம் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்துகின்றமை தங்களை மேலும் மனவேததனைக்கு உள்ளாக்குவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் ராகுலன் தெரிவிக்கையில்,
உடற்கூற்று பரிசோதனையின் பின் உடல்களை உறவினர்களிடம் கையளிப்பதில் வைத்தியசாலை பக்கத்தில் எவ்வித தாமதமும் ஏற்படுவதில்லை. மாறாக பொலீஸ் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஏற்படுகின்ற தாமதமே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo