வீதியோரத்தில் வீசப்பட்டிருந்த சடலம்!!
கொஸ்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பான்வெல்துவ – சுதுவெலிபொத வீதியருகே இன்று காலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
போகஹவெல, ஊரகஸ்மன்ஹங்திய பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரினது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பலபிட்டிய நீதிமன்ற நீதவானினால் மரண விசாரணை நடத்தப்பட்டதை தொடர்ந்து, சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
உயிரிழந்தவரின் முகத்தில் அடி காயம் காணப்பட்டதோடு, அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக கொஸ்கொட பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo