மலேசியாவின் முன்னாள் பிரதமர் குற்றவாளியாக நிரூபணம்!


பல மில்லியன் டொலர் நிதி மோசடி தொடர்பாக மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் குற்றவாளியாக நிரூபணமாகியுள்ளார் என அந்நாட்டின் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இவருக்கு எதிராக முதற்கட்டத்தில் 7 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. இந்த வழக்கு விசாரணை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

குறித்த குற்றச்சாட்டுகளுக்கான அனைத்து ஆதாரங்களும் முழுமையாக பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டதாகவும் அவையனைத்தும் சந்கேத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளதாக நீதிபதி இதன்போது அறிவித்துள்ளார்.

எனினும் நம்பிக்கை துரோகம், அதிகார துஸ்பிரயோகம் மற்றும் பணச்சலவை ஆகிய குற்றங்கங்களில் அவர் குற்றமற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையில் ஆட்சியில் இருந்த நஜிப் ராஸாக் மலேசிய அபிவிருத்தி சபையின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும்  அதிகளவு சொத்துக் குவித்ததாகவும் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

அத்தோடு, அரசாங்க நிதி மோசடி தொடர்பாக அவரிடம் சுமார் 16 மாதங்களுக்கு முன்பு விசாரணை ஆரம்பமாகிய நிலையில் இன்றையதினம் நீதிமன்றம் தீர்ப்பை அறிவித்துள்ளது.

இந்தநிலையில் அவருக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர் பல ஆண்டு காலம் சிறைதண்டனை அனுபவிக்க நேரிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எனினும் நஜிப் ராஸாக் தற்போது மேன்முறையீடு செய்துள்ளதால் அந்த மனு மீதான விசாரணை நிறைவடையும் வரை அவர் சிறை செல்ல வேண்டி ஏற்படாது எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.