குருணாகல் மேயரைக் கைது செய்யுமாறு கோரி மனுத் தாக்கல்!!
இந்த மனுவை நாமல் கருணாரத்ன தாக்கல் செய்துள்ளார்.
முதற்தடவையாக குருநாகலை இராசதானியாக்கிக் கொண்ட இரண்டாவது புவனேகபாகு மன்னர், பலகையால் உருவாக்கப்பட்ட மேடையில் தமது அரசவையை நடத்தியிருந்தார்.
குருநாகல் நகர மத்தியிலுள்ள இந்த அரசவையின் பாதுகாப்பிற்காக பின்னர் ஒரு கட்டடம் நிர்மாணிக்கப்பட்டது. இந்த அரசவையும் அதன் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட கட்டடமும் தொல்பொருள் சின்னங்களாக தொல்பொருள் திணைக்களத்தின் மேற்பார்வையில் இருந்தன.
சிறிது காலமாக குருநாகல் மாநகர சபை இந்த கட்டடத்திற்குள் ஹோட்டல் ஒன்றை நடத்திச் சென்றுள்ளது. இந்த நிலையில், குறித்த கட்டடத்தின் ஒரு பகுதி அண்மையில் தகர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை