மீண்டும் களத்தில் குத்துச் சண்டை ஜாம்பவான் மைக் டைசன்!!

எதிராளியை நொக் அவுட் மூலமாக வீழ்த்துவதில் புகழ் பெற்ற ஹெவிவெயிட் குத்துச்சண்டையில் சாதனையாளராக அமெரிக்காவின் முன்னாள் குத்துச் சண்டை ஜாம்பவான் மைக் டைசன், மீண்டும் களத்தில் குதிக்க போவதாக பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

54 வயதான மைக் டைசன், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டிக்னிடி ஹெல்த் ஸ்போர்ட்ஸ் பார்க் மையத்தில் எட்டு சுற்றுகள் கொண்ட காட்சி போட்டியில் களமிறங்கவுள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு இறுதியாக போட்டியிட்ட 51 வயதான ராய் ஜோன்ஸ் ஜூனியருடன், டைசன் மோதவுள்ளார்.

மைக் டைசனின் இந்த அறிவிப்பு தற்போது, அவருடைய இரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1985ஆம் முதல் 2005ஆம் ஆண்டு வரை ஹெவிவெயிட் குத்துச்சண்டையில் சாதனையாளராக திகழ்ந்த மைக் டைசன், 58 தொழில்முறை போட்டிகளில் 50இல் வெற்றியை ருசித்த டைசன், 2005ஆம் ஆண்டு ஓய்வுக்கு முன்பு கெவின் மெக்பிரைட்டுடன் தோற்றுப் போனார்.

குத்துச் சண்டை உலகில் ஜாம்பவானாக திகழும் மைக் டைசன், 20 வயதில் ஹெவிவெயிட் சம்பியனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.