மட்டக்களப்பு இளைஞன் அவுஸ்ரேலியாவில் திடீர் மரணம்!!
மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை பெருநிலம் விளாவெட்டுவான் ஊரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட மணமுனைமேற்கு பிரதேச சபை தவிசாளர் சண்முகராசா அவர்களின் சிரேஷ்ட புதல்வன் அனோஜன் கடந்த திங்கட்கிழமை (05/07/2020) அவுஸ்ரேலியாவில் திடீர் சுகவீனத்தால் உயிர் இழந்தார்.
வழமையாக தமது வேலைத்தளத்தில் கடமையை முடித்துக்கொண்டு அவர் தங்கும் இல்லத்தில் சென்று இரவு உறங்கியபின் அடுத்த நாளான கடந்த திங்கட்கிழமை 5ம் திகதி நித்திரையில் இருந்து நீண்ட நேரம் எழும்பாத நிலையில் அவர்தங்கி இருந்த வீட்டார் அவரின் அறையை திறந்து பார்த்தபோது அவர் இறந்து கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
மார் அடைப்பு காரணமாக இறந்தருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது அவுஷ்ரேலியா பொலிசார் இறந்தஉடலத்தை வைத்திய பரிசோதனைக்காக எடுத்துச்சென்றுள்ளனர்.
அன்னாரின் உடலத்தை இலங்கைக்கு எடுத்து வருவதற்கான முயற்சியை அவுஸ்ரேலியாவில் உள்ள அவரின்நண்பர்கள் முயற்சி எடுக்கின்றனர்.
2010,காலப்பகுதியில் அவுஸ்ரேலியாவுக்குச் சென்ற சண்முகராசா அனோஜன் கடந்த 2014,ம் இந்தியா வந்து திருமணம் செய்திருந்தார்.
அவரின் இளம் மனைவி எதிர்வரும் 2021,ம் ஆண்டு முற்பகுதியில் அவுஸ்ரேலியாவுக்கு செல்வதற்கு தயாராகஇருந்த நிலையில் இந்த துயர் மரணம் சம்பவித்துள்ளமை அவரின் குடும்பத்திற்கும் அனைத்து உறவுகளுக்கும்பாரிய வேதனையை தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




