38 முழுமையற்ற விசாரணை அறிக்கைகளை திருப்பியனுப்பினார் சட்டமா அதிபர்!!

ஈஸ்டர் தாக்குதலில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பான 38 முழுமையற்ற விசாரணை அறிக்கைகளை சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா பதில் பொலிஸ் மா அதிபரிடம் திருப்பி அனுப்பியுள்ளார்.

இந்த தாக்குதல்கள் தொடர்பாக மொத்தம் 78 விசாரணை அறிக்கைகள் இதுவரை திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷார ஜெயரத்ன தெரிவித்தார்.
விசாரணையை முறையாக முடித்த பின்னர் விசாரணைக் அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபர் சி. டி. விக்ரமரத்னவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக சட்டமா அதிபரினால் முழுமையற்ற விசாரணைக் அறிக்கைகளை பதில் பொலிஸ்மா அதிபருக்கு திருப்பி அனுப்பிய இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
கடந்த ஜூன் 26 அன்று, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பான 40 முழுமையற்ற விசாரணைக் அறிக்கைகளை சட்டமா அதிபர் திருப்பி அனுப்பியிருந்தார்.
பல அறிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்ட விசாரணைகளாக சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும், அவை முழுமையற்றவை, அந்த அறிக்கைகளின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியிருந்தார்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று இலங்கை முழுவதும் உள்ள 3 ஹோட்டல்களையும் 3 தேவாலயங்களையும் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு 500 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.